வாழிய வாழிய வாழியவே
வளம் மிகு திரியாய் பதியினில் உயர்ந்த
தமிழ் மகா வித்தியாலயம் வாழியவே
கணபதி துணையுடன் கவினுறு வயல்களும்
கன்னல் சுவைமிகு பால்தரும் கால்நடை
எண்ணுதற்கரிய செல்வம் சொரிந்திடும்
இனிதாய் அமைந்த திரியாய் மண்ணில்
(வாழிய…...)
எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகுமென
பண்ணும் பனுவலும் பாங்குறு கலைகளும்
நன்றே துலங்கிட நலம்பட வழங்கி
நம் தமிழ் மாணபினைப் பேணியே நாளும்
(வாழிய…...)
அன்பு பண்பு அடக்கம் பணிவு
உண்மை நேர்மை உயர்வு தருமென
கற்றாங் கொழுகுதல் கல்விக்கழகெனக்
கடமை புரியும் கல்விக்கூடம்
(வாழிய…...)
கல்வியைக் கற்றிட நல்வழி காட்டும்
நன்னெறி அதிபரும் நல்லாசிரியரும்
நானீலம் போற்றும் கோணேசர் அருளுடன்
நலமாய் வாழ்ந்திட வாழ்த்துகின்றோம்.
(வாழிய…...)





